வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

 

அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

தமிழ் சினிமா உலக அளவில் நல்ல வரவேற்பைப் ஒரு புறம் பெற்று வந்தாலும் கதைப் பஞ்சமும், டைட்டில் பஞ்சமும் ஹீரோயிசத்தாலும் பல படங்கள் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறது.

அதிலும் இப்போதெல்லாம் கதையை நம்பும் இயக்குனர்களை விட ஹீரோயின் சதையை நம்பும் இயக்குனர்கள் தான் அதிகரித்து வருகிறார்கள்.

முதலில் கணுக்கால் தெரிய ஆடை போட்டார்கள்… பின்னர் இடுப்பை காட்டினார்கள்… மார்பு பிளவை கொஞ்சமாக காட்டினார்கள்… அதிலும் கொஞ்சம் இறங்கி அரை டவுசர் முண்டா பனியனுக்கு ஹீரோயினை மாற்றினார்கள்.

கொஞ்ச நாளில் பிராவும் ஜட்டியுமே ஹீரோயின் காஸ்டியூம் ஆனது.
அதிலும் திருப்தி அடையாத இயக்குனர் பலர் புதுமை புகுத்துகிறேன் என்று டாப் லெஸ் ஆக்கினார்கள்.

முன்பொல்லாம் தொட்டு நடிக்கவே வெட்கப்பட்ட நிலை போய் ஆடை குறைக்கும் ஹீரோயின்கள் நிலையை பார்த்து தமிழ் சமூகம் தலை குனிந்து வெட்கப்பட… இப்போது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அமலாபால் நடிப்பில் ரத்னகுமார் என்ற இயக்குநர் புதுமை புகுத்தி இருக்கிறாராம்.

அப்படி என்ன புதுமை என்றால்… ஆடை குறைக்கவே வெட்கப்பட்ட ஹீரோயின் அமலாபால் இப்போது ஆடை போடவே வெட்கப்பட்டு முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார்.

அதோடு அந்த நிர்வாண காட்சியை படமாக்கும் போது அங்கே இருந்த 15 பேரையும் கணவராகவே பார்த்தேன் என்று அமலாபால் சொன்னதுதான் ஹைய்லைட்…

சினிமாவில் கிளாமர் இலை மறை காயாக இருந்த போது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. எப்போது ஹீரோயின் உடம்பை முழுசாக காட்டத் தொடங்கினாலும் அந்த படங்கள் தோற்றுத்தான் போயிருக்கிறது.

இப்போது ஆடை படத்திலும் கதையை இயக்குனர் ரத்னகுமார் நம்பவில்லை. அமலாபால் சதையை மட்டுமே நம்பி பட விளம்பரம் எல்லாவற்றிலும் அமலாபால் நிர்வாணமாக இருப்பது போல் விளம்பரம் செய்கிறார்.

ஏ சான்றிதழ் படம் என்றாலும் அந்த குறியீடு கண்ணுக்குத் தெரியாத அளவில் தான் போஸ்டர்களிலும் விளம்பர டிசைன்களிலும் இடம் பிடித்து உள்ளது.

கவர்ச்சி நடிகைகள் கூட இப்படி காசு பார்க்க நிர்வாணமாக நடிக்கவில்லை. கருத்து சொல்கிறேன் என்று ஆடை படத்தில் ஆபாசமாக நடித்திருக்கும் அமலாபால் அவரின் நிர்வாணத்தை நம்பிய இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களை என்ன சொல்வது…

– கோடங்கி

1,539 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன