வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

 

 

ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடித்து வந்த படத்துக்கு பேர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதும் படத்தின் தலைப்பு ’சுல்தான்’ என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘சுல்தான்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நடிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் அந்த படமே கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

653 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன