வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

அனைவரையும் அசத்தி மிரளவைக்க வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

 

 

 


அனைவரையும் அசத்த வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா  சைரா  நரசிம்ம ரெட்டி…!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர் சைரா நரசிம்ம ரெட்டி. அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார்.

இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கிளாமர் குயின் தமன்னா, நிஹாரிகா இவர்களோடு மெகாஸ்டார் சிரஞ்சீவி என இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி.

தமிழ் திரைப்பட துறையைச் சேர்ந்த பிரபல  ஒளிப்பதிவாளர் இரத்தினவேல் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அமித் திர்வேதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மெகா பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான படமாக சரித்திர காலத்தை கண் முன் கொண்டுவர உள்ள இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன