புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..!

 

 

 


பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிற படம் பிகில். இதில் பெண்கள் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஆக விஜய் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு முன்பாக ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில்… பாலிவுட் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் கால்பந்து பயிற்சியாளராக  நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர்  சமீபத்தில் ரிலீஸ் செய்து ஹிட் அடுத்த படம்  அஜீத்தின்  நேர்கொண்ட பார்வை. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் அஜய் தேவ்கன் வைத்து புது படமொன்றை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படம் 1952 முதல் 1962 வரையிலான இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த அப்துல் ரஹீமின் வாழ்கையை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.

இந்த படத்திற்கு  “மைதான்” என்ற தலைப்பு வைக்கப்பட்டது.   இப்படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக   கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். முதல் முறையாக பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் கால் பதிக்கும் படம் ஒரு பிரபல கால்பந்து பயிற்சியாளர் வாழ்க்கை வரலாறு தொடர்பானது.

ஏற்கனவே பிரபல நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடத்ததற்காக சமீபத்திய தேசிய விருது பெற்றவர்கள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டிலும் கீர்த்தி சுரேஷ் கொடி பறக்கலாம்.

496 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன