
யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..!
யோகி பாபு தற்போது “பப்பி” படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. காரணம் இப்படத்தின் போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருபக்கமும் மற்றொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர். அதற்காக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தற்போது சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் காவல் துறை கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்
இதற்கிடையில் நித்தியானந்தாவும் அவரது சார்பில் பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர்.
கோமாளி படத்தில் ரஜினியை நக்கல் செய்து இலவச விளம்பரம் செய்து கொண்ட ஐசரி கணேஷ் இந்த முறை பப்பியில் நித்தியானந்தரவை வம்புக்கு இழுத்து பரபரப்பு தேடிக் கொள்கிறார்.
