புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்

 

 

சமீபத்திய ரிலீஸ் படங்களில் “அப்பாடா” ரொம்ப நாளைக்கு அப்புறமா திக் திக்குன்னு பகீர் ரக சினிமாவா வந்திருக்கு காளிதாஸ்.

த்ரில்லர் படத்துல இப்படியும் கிளைமாக்ஸ் வைக்க முடியும்னு “அடடே” போட வைச்சிருக்கார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.

பரத் ஏற்கனவே பல படங்கள் மூலம் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் காளிதாஸ் புது அனுபவத்தை கொடுத்திருக்கும். திருமணம் ஆன இளம் போலீஸ் அதிகாரியின் உணர்வுகளை முடிந்த மட்டும் வெளிப்படுத்துகிறார்.

மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்த ஹீரோயின் அன்ஷீட்டல் ரொம்பவே கவர்கிறார். அழகும் நடிப்பும் சரியாக இருப்பதால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.

சீனியர் போலிஸ் அதிகாரியாக வரும் சுரேஷ் மேனன். நல்ல சாய்ஸ். நடந்த தற்கொலை சம்பவங்களை கையில் எடுத்து அசால்ட்டாக விசாரிக்கும் பாணி ரசிக்கும் ரகம்.

இது போன்ற த்ரில்லர் படத்தில் வழக்கமான காட்டப்படும் மசாலா காட்சிகள் எதையும் காட்டாமல் காளிதாஸை முழுமையாக தனி ரகமாக காட்டுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.

கதை தொடக்கத்தில் இருந்தே பயணிக்கும் பாதையும், அதில் பார்வையாளர்களை அழைத்து செல்லும் யுக்தியும் கூடுதல் சுவாரசியம்.

ஆங்காங்கே சின்ன இரட்டை அர்த்த வசனங்களுக்கு இளைஞர்களிடம் கிளாப்ஸ் மற்றும் சிரிப்பு சத்தம் எழுகிறது.

காளிதாஸ் படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீ செந்தில் சுவாரசியமாக கொண்டுசென்ற விதம்.
கிளைமாக்ஸ் வரை சுவாரஸ்யம் குறையாத வேகம்… கடைசியில் அடிக்கும் டிவிஸ்ட் திரில்லர் சற்றும் எதிர்பாராதது.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் காளிதாஸ் நீண்ட நாட்களுக்கு பின் சமூகத்தில் நடக்கும் நிஜத்தை காட்டும் கண்ணாடியாக மனதை ஈர்க்கும் ரகம்..!

686 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன