
சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த நாட்டில் 19 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.
காய்ச்சல் தடுப்பு மருந்தையும், எச்.ஐ.வி. கிருமி தடுப்பு மருந்தையும் சேர்த்து 71 வயது சீனப் பெண் நோயாளிக்கு டாக்டர்கள் கொடுத்தனர். தாய்லாந்துக்கு வந்திருந்த அந்த பெண் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
டாக்டர்கள் புதிய கலவை மருந்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த 48 மணி நேரத்துக்குள் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நேற்று அந்த பெண் தனது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார். அது மட்டுமின்றி காய்ச்சலும் விலகி விட்டது.
இதன் மூலம் காய்ச்சல் + எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகளின் கலவை உலக டாக்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே தாய்லாந்து டாக்டர்கள் குழு காய்ச்சல் மருந்தையும், எய்ட்ஸ் மருந்தையும் சேர்ந்து கலந்து தயாரித்துள்ள புதிய வகை மருந்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் சோதித்திப் பார்த்து வருகின்றன. அந்த சோதனைகளில் வெற்றி கிடைத்தால் கொரோனா வைரஸ் பரவு வதை வெற்றிகரமாக தடுக்க முடியும் என்று கருதுகிறார்கள்.
உலகம் முழுதும் கொரானா வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டறியும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
அதே நேரம் பாரம்பரிய தமிழ் சித்த மருத்துவத்தில் எல்லா நோய்க்கும் மருந்து உள்ளது. சமீபத்தில் தமிழ் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஒரு பேட்டி ஒன்றில் கொரானா வைரஸ் பாதிப்பை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் அதிகம் பரவி பயத்தை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சலுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.
