
ரஜினி தமிழர் இல்லை என்பதால் தமிழ்நாட்டை ஆள தகுதி இல்லை – பாரதிராஜா பரபரப்பு
தமிழன் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கோஷம் அடிக்கடி எழும்பும். தேர்தல் நேரத்தில் அந்த கோஷம் அமுங்கி விடும்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார். இன்னும் அரசியல் கட்சி எதையும் ஆரம்பிக்கவில்லை.
இந்த சூழலில் இயக்குனர் பாரதிராஜா ஒரு பரபரப்பு கிளப்பியுள்ளார்.
ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் பாரதிராஜா கூறிய கருத்து தமிழக அரசியலிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி என்ன சொல்லி இருக்கிறார் …
“அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்
தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினிகாந்த் ஆள்வதை ஏற்க முடியாது
தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும். அவர் வாழ வந்தவர்” என்கிறார் இயக்குனர் பாரதிராஜா .
