புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

 

 

 

ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது;

நடிகர் அசோக் செல்வன் பேசியது…

ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவிட்டார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார். சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆசை இல்லை அதனால் தான் இந்த பெரிய இடைவெளி. எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. எனக்கு பிடித்து ஆசைப்பட்டு செய்த படம் உங்களுக்கும் பிடிக்கும். அஷ்வத் 8 வருடம் ஒன்றாக பயணிக்கும் நண்பன். அஷ்வத் இந்தப்படம் செய்கிறான் என்பதால் எனக்கு பயமே இல்லை அந்தளவு முழுமையாக அவனை நம்புகிறேன். படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர். கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார்.   அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள் நன்றி.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியது…

எங்கள் படங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. நாங்கள் பெரிய பட்ஜெட் படம் எடுப்பதில்லை. சின்ன படஜெட் படங்கள் தான் எடுக்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கு ஆதரவு தந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்கள் கம்பனியில் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. “ராட்சசன்” படத்திற்கு பின்னர் அடுத்து என்ன செய்யலாம் எனும் போது அஷ்வத் சொன்ன கதை எங்களுக்கு பிடித்தது. உடனே முடிவு செய்து இப்படத்தை ஆரம்பித்தோம். எல்லாமே கடவுளின் செயல் போல் தான் நடக்கிறது. இப்படம் நம் வாழ்வில் நடக்கும் கதைதான் ஆனால் அதை  சொல்லும் விதத்தில் நேர்த்தி இருக்கும். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். ரித்திகா சிங் தான் இந்தக்கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவரும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார். மிக மிக இயல்பான நபராக இருந்தார். அர்ப்பணிப்பு மிக்கவரகா இருந்தார். அசோக் செல்வனுக்கு இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும். அவருடைய திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்வேன். அவர் இன்னும் பல உயரங்கள் செல்வார். வாணி போஜனை தமிழில் அறிமுகப்படுத்துவதில் பெரிய மகிழ்ச்சி.   சாரா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இந்தப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறார். இந்தப்படம் பார்ப்பார்கள்  அனைவருக்கும் சாராவை பிடிக்கும். விஜய் சேதுபதி மிகுந்த ஆதரவாக இருந்து நடித்து தந்தார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு படம் காட்டினேன் அவருக்கு படம் பிடித்திருந்தது. கட்டிப்பிடித்து பாராட்டினார். தெலுங்கில் இருந்து வந்து படம் பார்த்து ரிமேக் செய்ய இப்போதே அணுகினார்கள். படம் ரிலீஸாகும் முன்பே எங்களுக்கு இந்த மரியாதை கிடைத்திருக்கிறது. அதை பெருமையாக  நினைக்கிறேன். பூபதி அருமையாக எடிட் செய்திருக்கிறார்.  என்னை அதிகம் காயப்படுத்திய இயக்குநர் அஷ்வத் தான் ஆனால் அதிகமான சந்தோஷம் தந்த படத்தை தந்திருக்கிறார். அஷ்வத் உடன் இன்னும் ஒரு படம் செய்ய விரும்புகிறேன். படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் அப்போது தான் அடுத்தவர்களுக்கு பிடிக்கும்.  பாடல்கள் மற்றும்  டிரெயலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார் டில்லிபாபு.

நடிகை ரித்திகா சிங் பேசியது…

இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ளேன். இப்படக்குழு அனைவரும் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் அபிநயா என்னுடைய சகோதரி போல் மாறி விட்டார். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி  வர வேண்டும் என்பதில்  தெளிவாக இருப்பார். சாரா மிகச்சிறந்த நண்பர், மிக கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர், மிக அழகானவர் அவர் என் சகோதரி போல் அன்பு செலுத்தினார். அசோக் செல்வன் மிகமிக ஆதரவாக இருந்தார். ஒரு நண்பனாக எந்த ஈகோவும் இன்றி கூட இருந்தார். அவர் போல பெண்களுக்கு துணையாக ஆண்கள் உலகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் நன்றி என்றார் ரித்திகா

318 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன