வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

 

சீறு விமர்சனம்

வெற்றிக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஜீவா… செண்டிமெண்ட் கதையை தரும் ரத்னசிவா… பிரமாண்டமான ஹிட் படங்களை தயாரிக்கும் ஐசரி கணேஷ் இந்த கூட்டணியின் படம் தான் சீறு….

தங்கை பாசம் கொண்ட அண்ணனாக ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் இது ரொம்ப புதுசு. காரணம் தங்கைகளின் பாசத்திற்காக பயங்கர ஸ்பீடாக ஆக்ரோஷமாக சீற்றம் காட்டியிருக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளும், தங்கை செண்ட்டிமெண்ட் காட்சிகளும் ஜீவாவுக்கு ஸ்கோர் தரும்.

தங்கையாக வரும் நந்தினி செம ஸ்பெஷல்… கதை நாயகியாக அப்ளாஸ் அள்ளுவார்.

ஹீரோயின் ரியா வந்து போகிறார் பெருசா எதுவும் இல்லை.

வில்லன் நவ்தீப் வக்கீலா தாதாவா அப்படின்னு புரிஞ்சிக்க முடியாத கேரக்டர். ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அவ்ளோ வில்லத்தனம் தேவையில்லியே பாஸ்…

திரைக்கதை பலம் கொஞ்சம் குறைவு. லாஜிக் பல இடங்களில் கை தட்டி சிரிக்கிறது.

இமான் இசையில் செவ்வந்தியே பாடல் ரசிக்கும் ரகம். பின்னணி இசை இரைச்சல் அதிகம்…

முதல் பாதி மசமசன்னு போனாலும் இரண்டாம் பாதி விறுவிறுன்னு போவதால் ஆக்‌ஷன் படம் பார்த்த பீல் வரும்.

பப்ளிக் டெலிபோன் பூத் காட்சி பரபரப்பான மாஸ்டர் பீஸ்…

நட்பு இதுதான் மைய கரு என்றாலும் தோழிக்கு நேர்ந்த அவலத்துக்கு பதில் சொல்ல உடன் பழகிய தோழிகள் களத்தில் இறங்கி இருப்பது புதுசு…

வருண் வித்தியாசமான வில்லத்தனம். ஹீரோயிச முயற்சிகளை விட இதுபோன்ற நெகட்டிங் கதாபாத்திரம் கை கொடுக்கும்.

சீறு….. திரைக்கதை இன்னும் வலுவாக அமைந்திருந்தால் பயங்கரமாக சீற்றம் கண்டிருப்பான். வசூலிலும் வென்றிருப்பான்.

– கோடங்கி

771 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன