சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

 

பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

*பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற பின் மக்கள் முன்னிலையில் பேசிய கெஜரிவால், ‘டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை.

கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன்.

நாட்டுக்கே டெல்லி ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி. தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்.

டெல்லி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. அதேபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவபர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. கல்வி, மருத்துவம் இரண்டும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

டெல்லியின் முழு வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – அப்படீன்னார்.

895 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன