புதன்கிழமை, மே 15
Shadow

Tag: அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் – கவுதம் கம்பீர் ட்வீட்

அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் – கவுதம் கம்பீர் ட்வீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் - கவுதம் கம்பீர் ட்வீட் கொரானா காலகட்டத்தில், டெல்லி அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது என பா.ஜ.க. எம்.பி., கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநர் நல்ல முடிவெடுத்தார். டெல்லி மருத்துவமனைகளில் பிற மாநில நோயாளிகளுக்கு இடமில்லை என்ற உத்தரவு முட்டாள்தனமானது, இந்தியா என்பது ஒன்று. நாம் இந்த தொற்றை ஒன்றிணைந்தே எதிர்த்துப் போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்....
கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்… தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் எச்சரிக்கை!

கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்… தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்... தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை! டெல்லியில் சில தனியார் ஆஸ்பத்திரிகள் கொரானா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வசூலிப்பதாகவும், அந்த ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் 36 அரசு ஆய்வகங்களும், மற்றும் சில தனியார் ஆய்வகங்களும் கொரானா பரிசோதனை நடத்தி வருகின்றன. டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை....
கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் - முதல்வர் முடிவு கொரானாவை தடுக்க ,5ம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- டெல்லியில் இப்போது வரை அனுமதிக்கப்பட்ட வற்றைத் தவிர, முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ப...

கொரானா பீதி… மார்ச் 31வரை டில்லியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – அர்விந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது, தேர்வு நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லுரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்-வுடனான சந்திப்புக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது....
டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை… பலி 10 ஆக உயர்வு!

டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை… பலி 10 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை... பலி 10 ஆக உயர்வு! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன. வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார். இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் நே...
தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உள்துறை அமித்ஷாவுடனான ஆலோசனைக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். கலவரம் பாதித்த வட்டாரங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.. அமித்ஷா நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற அனைவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்....
பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் – டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் - டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு ! மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். *பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின் மக்கள் முன்னிலையில் பேசிய கெஜரிவால், 'டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை. கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன். நாட்டுக்கே டெல்லி ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி. தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். டெல்லி ...
டெல்லியில் மண்ணைக்கவ்விய பாஜக… மீண்டும் மகுடம் சூடிய ஆம் ஆத்மி!

டெல்லியில் மண்ணைக்கவ்விய பாஜக… மீண்டும் மகுடம் சூடிய ஆம் ஆத்மி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெற்று உள்ளோம் - வெற்றி மகிழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது.  இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 63  தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்-மந்தி...
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது தலைநகரான டெல்லியில் 70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மீண்டும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்த...