திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் – கவுதம் கம்பீர் ட்வீட்

 

 

அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் – கவுதம் கம்பீர் ட்வீட்

கொரானா காலகட்டத்தில், டெல்லி அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது என பா.ஜ.க. எம்.பி., கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநர் நல்ல முடிவெடுத்தார். டெல்லி மருத்துவமனைகளில் பிற மாநில நோயாளிகளுக்கு இடமில்லை என்ற உத்தரவு முட்டாள்தனமானது, இந்தியா என்பது ஒன்று. நாம் இந்த தொற்றை ஒன்றிணைந்தே எதிர்த்துப் போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

321 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன