வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

“மாஸ்டர்” விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!

 

“மாஸ்டர்” விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!

நடிகர் விஜய் சமீபத்திய படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் பெரும் சர்ச்சையை எதிர் கொள்ளும்.

குறிப்பாக சமீபத்திய பட ரிலீசுக்கு முன் நடைபெறும் ஆடியோ விழாவில் விஜய் சொல்லும் குட்டிக்கதையும் இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் மாஸ்டர் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படக்குழுவும், விஜய்யும் தொடர்ந்து ஏதாவது பரபரப்புகளுக்கு சிக்கி வருகிறார்கள்.

நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை திடீரென ஷூட்டிங்கை நிறுத்தி வைத்து விஜய்யை ஒரு கிரிமினல் குற்றவாளி போல காரில் அழைத்து சென்று 48 மணி நேரம் வெளியுலக தொடர்புகளை தடுத்து ரெய்டு நடத்தி கடைசியில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றாமல் கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெய்டுக்கு காரணம் விஜய் மீதான ஆட்சியாளர்களின் பயம் என்ற கருத்தும் உலாவராமல் இல்லை.

இந்த நிகழ்வுக்கு பின் யூனிட் வேன் மீது ஏறி நின்று விஜய் எடுத்த செல்பி மாஸ்டர் பீசாக இணையத்தில் வைரலானது.

இந்த சூழலில் இன்று மாஸ்டர் படத்தின் ரெண்டாவது பாடல் வெளியானது. அதுவும் படடையை கிளப்பி உள்ளது.

மேலும் வரும் 15ம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த ஆடியோ விழாவை தடுக்க என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள் போல…

எப்படியும் ஆடியோ விழாவில் விஜய் வாய் சும்மா இல்லாமல் ஏதாவது ஒரு குட்டிக்கதை சொல்லும். அதுவும் குறிப்பாக சமீபத்திய ஷூட்டிங் ஸ்பாட் ரெய்டு முக்கிய இடம் பிடிக்கும் என்பதால் ஆடியோ விழாவையே தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே கல்லூரிகளில் நடத்த முடியாதபடி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. நட்சத்திர ஓட்டலில் நடத்தலாம் என்றால் கொரானா பீதியை கிளப்புகிறார்கள்.

இதையெல்லாம் மீறி விழாவை நடத்தினால் என்ன செய்வது என யோசித்த பிறகு வழக்கமாக கடைபிடிக்கும் ரெய்டு அச்சுறுத்தல் அஸ்திரத்தை கையில் எடுத்துக்கிறார்கள்.

விஜய் வீட்டில் 48 மணி நேரம் சல்ல்டை போட்டு தேடியும் பைசா பேராததால் இப்போது படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் மீது வருமானவரித்துறை கண் வைத்தது.

நேற்று காலையில் இருந்து லலித் வீட்டில் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

இப்படி செய்து மீண்டும் ரெய்டு பயத்தை ஏற்படுத்தி விஜய் வாய்க்கு பூட்டு போட அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

536 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன