செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

 

 

மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படம் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது.

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை தங்களின் காரில் அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் வரும் மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில், உருவாகி உள்ள வாத்தி கம்மிங் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது. கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விஜய் ஆடும் மாஸ் ஓபனிங் பாடலாக வாத்தி கம்மிங் பாடல் அமைந்துள்ளது.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் எந்த ஒரு புதிய படமும் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

1,305 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன