சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

 

கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

கொரானா அறிகுறி உள்ள பக்தர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வரவேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவேண்டும் என்றும், கைகளை கழுவுவதற்கு தேவையான கிருமி நாசினிகளை கொண்டு வர வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினிகளை தெளிக்கவும் தேவஸ்தானம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பணிபுரியும் ஊழியர்களும் முகமூடி அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலக அளவில் தினமும் அதிக பக்தர்களை கூடச் செய்யும் திருப்பதி கோயிலிலும் கொரானா வைரஸ் பீதி ஹெவியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

338 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன