வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கொரானாவை ஒழிக்க வல்லரசுகளே திணறுகிறது அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுதும் ஊரடங்கு – பிரதமர் மோடி உத்தரவு

 

 

கொரானா வைரஸ் பரவலை தடுக்க அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள்.

இன்று இரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் சுய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் பெரும் அழிவை சந்திக்க வேண்டி வரும்.

ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்.

காட்டுத்தீ போல் கொரானா பரவி வருகிறது. .
ஒருவருக்கு தெரியாமலேயே கொரானா தொற்று ஏற்படுகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

கொரானாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் சரி செய்து விடலாம்.

வல்லரசு நாடுகளாலேயே கொரானாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரானாவை கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாட்டுடன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான்.

பொருளாதாரத்தை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனமாக பின்பற்றுங்கள்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் சிரமத்தை உணருங்கள்.

24 மணி நேரமும் பணியாற்றும் ஊடக துறைக்கு நன்றி சொல்லுங்கள். அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்.

மருத்துவ துறையினர் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகிறார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒரே இடத்தில் மக்கள் குவிய வேண்டாம்.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்

கொரானாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார்கள்.

சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரானாவை ஒழிக்கலாம்.

கொரானா சிகிச்சைகளை மேம்படுத்த 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

21 நாள் ஊரடங்கு எனபது மக்கள் உயிரை காப்பற்றத்தான் என பிரதமர் மோடி பேசினார்.

1,009 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன