வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கொரானா தடுப்பு நிதியாக 4 கோடி வழங்கிய பிரபல நடிகர்!

 

கொரானா தடுப்பு நிதியாக 4 கோடி வழங்கிய பிரபல நடிகர்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி உதவி அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே பெப்சி அமைப்பு தொழிலாளர் நலனுக்காக நடிகர்கள் ரஜினி 50 லட்சம், சூர்யா, கார்த்தி, கமல், சிவகார்த்திகேயன் தலா 10 லட்சம் வழங்கினார்கள்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

இதுவரை தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சமும் வழங்கி உள்ளார்.

477 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன