சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

 

 

நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது.

வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.

காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர்.

இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டார்.

இப்போது அதே பாணியில்
நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா முன்னெச்சரிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்ருதிஹாசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவரது தாய் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அக்‌ஷராஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது தன்னுடன் யாரும் இல்லை, கிளாரா என்ற பூனை மட்டும் இருப்பதாக ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலக வாசலில் தமிழக அரசின் கொரானா தனிமைபடுத்தல் வீட்டுக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பலரும் கமல்ஹாசன் கொரானா தொற்றுக்கு ஆளானதாக தகவல் பதிவிட சமூக வலைதளங்கங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் கடந்த வாரம்தான் நடிகை கவுதமி துபாயில் இருந்து சென்னை திரும்பினாராம். கவுதமியின் பாஸ்போர்ட் முகவரியாக கமல்ஹாசன் ஆழ்வார் பேட்டை அலுவலகம் காட்டப்பட்டு உள்ளதால் இந்த ஸ்டிக்கர் சிக்கல் என்கிறார் விவரம் அறிந்த சிலர்.

இதை ஆமோதிக்கும் விதமாக “கமல் அலுவலகத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விவகாரத்தில் சிறிய தவறு நடந்திருக்கலாம்” என மாநகராட்சி கமிஷனர் கூறிய விளக்கம் தான்.

967 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன