புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

 

இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி

உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வரும் கொரானாவை கட்டுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது.


இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ள நிலையில் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மேலும் 17 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரானா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு. சிகிச்சைக்கு பின் 5 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரானா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

560 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன