
பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!
உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பால் மனித குலமே ஆட்டம் கண்டுள்ளது.
இந்த சிக்கலில் உலகின் பல நாடுகள் கடுமையான ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துள்ளது.
இந்த சிக்கலில் தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது.
திரைத்துறை சங்கங்கள் இணைந்துள்ள பெப்சி உதவி கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதன் பேரில் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட சிலர் பணமாகவும் அரிசி மூட்டைகளாகவும் கொடுத்தனர்.
இந்த நிலையில் வந்த நிதியும், பொருட்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை எனவே மீண்டும் நிதி கேட்கபட்டது.
தமிழ் திரையுலகில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் யாரும் பெரிதாக நன்கொடை அளிக்கவில்லை.
ஆனால், கொரானா விழிப்புணர்வு என்ற பெயரில் தினமும் ஒரு வீடியோ, கவிதை, பாட்டு என எதையாவது வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்வது அதிகரித்து விட்டது.

இந்த சூழலில் நயன்தாரா அவரது மனம் கவர்ந்த காதலன் விக்னேஷ் சிவன் இருவரும் மிக நெருக்கமாக அமர்ந்தபடி கை விரல்களை ஆட்டியபடி டிக்டாக் வீடியோவை சமூக வலைதளங்கங்களில் வெளியிட… அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வீட்டுக்குள்ளே இருந்தாலும் கூடுமானவரை இடைவெளியை கடைபிடிக்க சொல்லியிருக்கும் போது இதுபோன்ற டிக்டாக் வீடியோ எல்லாம் தேவையா என நெட்டிசன்கள் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் காய்ச்சி எடுத்தார்கள்.
சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரம் சர்ச்சை ஆனதால் அதிர்ந்து போன நயன்தாரா இதை மறக்கடிக்க ஒரே வழி தான தர்மம்தான் என பெப்சி அமைப்புக்கு 20 லட்சம் நன்கொடை கொடுக்க… அவர் எதிர்பார்த்தது போல டிக்டாக் வீடியோ சர்ச்சையை மறந்த நெட்டிசன்கள் நயன்தாரா நன்கொடையை ஏகத்துக்கு புகழ்ந்து வருகிறார்கள்.

அதோடு, பெப்சிக்கு 20 லட்சம் கொடுத்த நயன்தாரா கண்டிப்பாக முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமாவது கொடுப்பார் என்றும், பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியாவது கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா கொடுத்த நன்கொடையால் அடுத்தடுத்து நம்மூர் திரைப்பிரபலங்கள் முதல்வர், பிரதமர் நிவாரண நிதிக்கு தொகை கொடுக்க தொடங்குவார்கள் என்ற கருத்தும் பரவி உள்ளது.
