சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்!

 

 

பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்!

உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானாவை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி “எப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் ஏரிய விடுங்கள். கொரானா இருள் அகலட்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் பேரில் பிரதமர் மோடி டில்லியில் தனது வீட்டில் குத்துவிளக்கேற்றினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தொழிலதிபர் ரத்தன் டாடா, சச்சின், திரைப்பிரபலங்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும், நாட்டு மக்களும் பிரதமரின் கருத்தை வலுப்படுத்த விளக்கேற்றி ஒற்றுமையை காண்பித்தனர்.

அதே நேரம் பாஜக கட்சி தொடங்கிய தினம் அந்த நேரத்தில் தான் தீர்மானிக்கப்பட்டது அதை கொண்டாடதான் பிரதமர் மோடி மறைமுகமாக இப்படி விளக்கேற்றும் நிகழ்வை நடத்த சொல்கிறார் என்ற கருத்தும் பல இடங்களில் பரவலாக கிளம்பியது.

ஆனால் பாஜகவோ, பிரதமர் மோடி தரப்பிலோ இந்த கருத்தை ஆமோதிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

இந்த சூழலில் மெட்ரோ பட நடிகர் சிரிஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கேற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“பாஜக தொடங்கி நாற்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகள் ” என கூறியுள்ளார்.

 

 

நடிகர் சிரிஷ் கருத்து பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு முரணாக இருப்பதால் பிரதமர் கருத்தை தவறாக சித்தரித்து நாட்டு மக்களை நடிகர் சிரிஷ் குழப்பும் வேலையை செய்கிறார் என்றோ தேவையற்ற கருத்தை எழுதி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வதந்தி கிளப்புகிறார் என்றோ சட்ட நடவடிக்கை எடுக்கவும் வழி இருக்கிறது.

இந்த நடிகர் சிரிஷ் தமிழகத்தை சேர்ந்த பிரபல பெண் எம்.பி.யின் உதவியாளர் மகன் என்பது குறிப்பிடதக்கது.

 

881 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன