புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

கொரானா நிவாரண உதவியிலும் மோசடி? 300 மூட்டை அரிசி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் ஊழல் புகார்!

 

 

 

கொரானா நிவாரண உதவியிலும் மோசடியா? 300 மூட்டை அரிசி ஸ்வாகா… ராதாரவி மீது மீண்டும் ஊழல் புகார்!

உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் காரணமாக தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது.

வேலை இழந்துள்ள தமிழ் திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதி திரட்டிய பெப்சி தன்னிடம் வந்த நிவாரண பொருட்களை ஒவ்வொரு சங்கத்திற்கும் பிரித்து கொடுத்தது.

அதன் படி ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் யூனியனுக்கு 300 மூட்டை அரிசியும் கணிசமான ரொக்கமும், இன்னபிற நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போது பெப்சி வழங்கிய நிவாரண பொருட்களை உண்மையில் சிரமப்படும் டப்பிங் உறுப்பினர்களுக்கு வழங்காமல் ராதாரவி தன் ஆதரவாளருக்கு மட்டும் வழங்கி விட்டு மொத்த நிவாரண உதவியையும் கொடுத்து தீர்த்து விட்டதாக கண்க்கு காட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே ராதாரவியின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சங்க கணக்கு வரவு செலவுகளை கேள்வி கேட்கிற உறுப்பினர்களை சங்கத்தை விட்டு காரணம் இல்லாமல் நீக்கி விடுவதும் தொடர்கதையாவது தெரிந்த ஒன்றே.

இந்த நிலையில் டப்பிங் சங்கத்திற்கு வந்த நிவாரண உதவிகளில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் புகார் அளிக்கிறார்கள்.

அவர்கள் தரப்பில் வெளியான அறிக்கை:

நிவார‌ண‌ பொருட்க‌ள் வ‌ழ‌ங்குவ‌திலும் ட‌ப்பிங் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் ஊழலா?

“300 மூட்டைகளை மிகவும் சிரமப்படுபவர்களுக்கு வழங்கலாம் என்ற நல்லெண்ணத்தில்,
நம் உறுப்பினர்களில் உதவி கேட்டவர்களில் 300 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நேரம் கூறி வழங்கி வருகிறோம்.” – இது, இந்த குழுவில் கேள்வி எழுப்பிய பிறகு, டப்பிங் சங்க நிர்வாகம் உறுப்பினர்களுக்கு தெரிவித்த தகவல்.

ஆனால், யூனிய‌ன் நிர்வாக‌த்தின‌ரின் இந்த‌ த‌க‌வ‌லில் ப‌ல‌ கேள்விக‌ள் எழுகிற‌து.

1அ. மிகவும் சிரமப்படுபவர்கள் லிஸ்ட்டை எத‌ன் அடிப்படையில் ட‌ப்பிங் ச‌ங்க‌ நிர்வாக‌த்தின‌ர் த‌யாரித்தார்க‌ள்?

1ஆ. அவதிப்படும் அனைவ‌ரும் இந்த‌ லிஸ்டில் இட‌ம் பெற்றுவிட்ட‌ன‌ரா??

2அ. உறுப்பின‌ர்க‌ள் உத‌வி கேட்டார்க‌ளா? எப்போது யாரிட‌ம் எப்ப‌டி கேட்டார்க‌ள் ?

2ஆ. உத‌வி தேவைப்ப‌டுவோர்க‌ள் ச‌ங்க‌த்தை அனுக‌லாம் என்று message எப்போதாவ‌து உறுப்பின‌ர்க‌ளுக்கு அனுப்பினார்க‌ளா?

3அ. எவ்வ‌ள‌வு பேர் உத‌வி கேட்டார்க‌ள்?

3ஆ. Call செய்து கேட்டார்க‌ளா? க‌டித‌ம் எழுதி கேட்டார்க‌ளா?

4அ. அதில் 300 பேர் மட்டுமே மிக‌வும் சிர‌ம‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் என்று எத‌ன் அடிப்ப‌டையில், யார் முடிவு செய்தார்க‌ள் ?

4ஆ. செய‌ற்குழு முடிவு செய்த‌தா?

5அ. அந்த‌ 300 பேரை மட்டும் தேர்ந்தெடுத்தது யார் ? யார்?

5ஆ. உதவி நிதியாக ந‌டிகை செல்வி.ந‌ய‌ன்தாரா அவர்கள் 20 ல‌ட்சம் fefsiக்கு அளித்ததாக ஒரு தகவல். அதில் ஒரு பங்கும் ந‌ம் ட‌ப்பிங் ச‌ங்க‌த்திற்கு உதவி நிவாரணமாக வ‌ந்திருக்கும். அவ‌ரை மேடையில் கிண்ட‌ல் செய்த‌ ராதார‌வி எவ்வ‌ள‌வு கொடுத்தார்?

5இ. ந‌ம்பிக்கை இல்லாத‌தால் தான் ட‌ப்பிங் ச‌ங்க‌த்தில் உறுப்பின‌ராக‌ இருக்கும் ந‌டிகர் சூரியா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவ‌கார்த்திகேய‌ன் போன்றோர், ட‌ப்பிங் ச‌ங்க‌த்திற்கு உத‌வித்தொகையை நேர‌டியாக‌ கொடுக்காம‌ல் fefsi க்கு கொடுத்தார்களோ ??

5ஈ. ட‌ப்பிங் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் விநியோகம் செய்வதாக விளம்பரப்படுத்தும் நிவார‌ண‌ பொருட்க‌ளில் வெளிப்ப‌டைத் த‌ன்மை இல்லையென்றால் யாரிட‌ம் முறையிட‌ வேண்டும் ?

6அ. உறுப்பின‌ர்க‌ள் எண்
வ‌ரிசைப்ப‌டி, ப‌ல‌ வய‌தான‌ மூத்த உறுப்பினர்களின் நிலை என்ன‌?

6ஆ. மூத்த‌ உறுப்பின‌ர்க‌ள் ப‌ல‌ருக்கு இப்ப‌டி ஒரு உத‌வித்தொகை /பொருள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தை ஏன் சங்க நிர்வாகம் தெரிய‌ப்ப‌டுத்தவே இல்லை? ட‌ப்பிங் ச‌ங்க‌ நிர்வாக‌ம் இதை மூடி ம‌றைப்ப‌தின் ர‌க‌சிய‌ம் என்ன‌? அவ‌ர்க‌ளுக்கு எப்போது தெரிவிப்பார்க‌ள் ?

7அ. நிர்வாக‌ ஆத‌ர‌வாள‌ர்களுக்கு ம‌ட்டும் உத‌விக‌ள் அனுப்ப‌ப்ப‌டுகிற‌தா?

7ஆ. நிர்வாக‌த்தின‌ருக்கு எதிரான‌வ‌ர்க‌ள் என்று த‌னி லிஸ்ட் த‌யாரிக்க‌ப்பட்டு அவ‌ர்க‌ளை வேண்டும் என்றே நிவார‌ண‌ உத‌வி தராமல் ஒதுக்குகிறார்க‌ளா?

8அ. நிர்வாகம் அனுப்பியிருக்கும் வீடியோவில், 2 உதவிப் பொருள் வ‌ண்டிகள் (குட்டியானை) தெரிகின்றன. அதில் இருக்கும் மூட்டைக‌ளை க‌ண‌க்கிட்டால் 20 மூட்டைக‌ள் கூட‌ தேறாது போல் இருக்கிற‌து.
7 மூட்டைக‌ளை யூனிய‌ன் வ‌ளாக‌த்தில் வைத்திருக்கிறார்க‌ள், வீடியோ படி. மீதி மூட்டைக‌ள் எங்கே?

8ஆ. 300 மூட்டைக‌ள் வைக்க‌ எவ்வ‌ள‌வு இட‌ம் தேவை? அவை ட‌ப்பிங் ச‌ங்க‌த்தில் எங்கே வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து?

9அ. FEFSI கொடுத்து அனுப்பிய‌ 300 மூட்டைக‌ள் ட‌ப்பிங் ச‌ங்கத்தில் உண்மையில் பரிதவிக்கும் உறுப்பினர்களுக்கு தரப்பட்டதா?

9ஆ. அல்ல‌து நிர்வாக‌த்தின‌ரால் வேறு இட‌த்திற்கு இட‌ம் மாற்ற‌ப்ப‌ட்டதா?

10அ. 300 பேருக்கு கொடுத்துவிட்டோம் என்று க‌ணக்கு ம‌ட்டும் எழுதுகிறார்க‌ளா?

10ஆ. இவை அத்தனையும் ராதார‌விக்கு தெரியாம‌ல் ந‌ட‌க்கிற‌தா?

10இ. அல்ல‌து அவ‌ருக்கும் தெரிந்தே தான் ந‌ட‌க்கிற‌தா?

இத்த‌னை கேள்விக‌ள் இந்த‌ ஒரு சில‌ வ‌ரிக‌ளில் எழுகிற‌தே?

ஏற்க‌ன‌வே, ட‌ப்பிங் ச‌ங்க‌ நில‌ம் வாங்கிய‌து, க‌ட்ட‌ட‌ம் கட்டிய‌து, உறுப்பினர் சேர்க்கை வழக்குகள் என பல வ‌கையில்
கோடிக‌ளில் ஏமாற்றிவிட்டு அப்ப‌ட்ட‌மாக‌ மாட்டிக்கொண்ட‌ ட‌ப்பிங் ச‌ங்க‌ நிர்வாகிக‌த்தை நம்புவது, மணல் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்.

நிவார‌ண‌ பொருட்க‌ளில் ஊழ‌ல் இல்லாம‌ல் உண்மையில்
பாதிக்க‌ப்ப‌ட்டோருக்கு போய்
சேர வேண்டும் என்ப‌து உறுப்பின‌ர் ந‌ல‌னில் அக்கறை கொண்டுள்ள‌ ட‌ப்பிங் க‌லைஞ‌ர்க‌ளின் கோரிக்கை.

இதை க‌ருத்தில் கொண்டு திரைத்துறையை சேர்ந்த உரிய‌வர்கள் ந‌ட‌வ‌டிக்கை எடுத்தால் ந‌ல‌மாக‌ இருக்கும்.

சங்க உறுப்பினர்களுக்கு நியாயமும் கிடைக்கும் என்று புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள்.

உண்மையில் ராதாரவி நேர்மையானவராக இருந்தால் பெப்சி நிர்வாகம் டப்பிங் சங்கத்திற்கு என்னென்ன பொருட்களை எவ்வளவு எண்ணிக்கையில் கொடுத்தது, ரொக்கம் எவ்வளவு கொடுத்தார்கள். அப்படி வந்த உதவியை யார் யாருக்கு கொடுத்தோம் என்கிற வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். ஆனால் வழக்கமாக சங்கத்திற்கு முறையாக டப்பிங் உறுப்பினர்கள் உயிரைக் கொடுத்து பேசி அதன் மூலம் வரும் வரவு செலவுகளையே முறையாக கணக்கு காட்டாத ராதாரவி ஓசியில் வந்த நிவாரண உதவியையா கணக்கு காட்டுவார்…

எறுப்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பார்… இந்த பழமொழிக்கேற்ப தொடரும் குற்றச்சாட்டுக்களால் ஒரு நாள் உண்மை வெளிச்சத்திற்கு வராமலா போகும்… காத்திருப்போம்.

– கோடங்கி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன