
மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு டிவியில் பேசும்போது கூறியதாவது:
பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது.
உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
கொரானா பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை விட நாட்டின் நலனே முக்கியம்.
பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவை சந்தித்தாலும் உயிரிழப்புகளை தடுத்து வருகிறோம்.
இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு வழங்கப்படும்.
நாட்டில் உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது.
நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்பது உட்பட பல விஷயங்களை பிரதமர் மோடி அறிவித்தார்.
