ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1
Shadow

கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

 

 

கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதத்துக்கு ஒருமுறையாவது தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.

கொரானா தொற்று தமிழகத்தில் நுழைந்த பிறகு அவர் சேலம் செல்லாமல் இருந்தார். கடந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகும் சென்னையிலேயே இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

வருகிற 20-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட உள்ளது. கொரானா தொற்றுவின் தாக்கமும் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

சேலத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் எத்தனை பேர் வீடு திரும்பினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

சேலத்திற்கு சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்புகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன