
குறைந்த செலவில் டெல்லி ஐ.ஐ.டி தயாரித்த கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.கிட்!
உலகம் முழுதும் பரவி மக்களை கொடூரமாக பாதித்து உள்ள கொரானாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளும் விலை அதிகம் இருப்பதால் குறைந்த செலவில் வைரஸ் தொற்றை கண்டறிய ரேபிட் கிட் சீனாவில் இருந்து பல கோடி செலவில் வாங்கப்பட்டது.
அப்படி வாங்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் சரியான முடிவுகளை காட்டால் தவறாக காட்டியதால் சீனாவின் மோசடியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே பிரான்ஸ் உட்பட சில நாடுகளும் சீனாவின் இந்த மோசடி குறித்து புகார் எழுப்பி இருக்கிறார்கள்.
இந்த சூழலில் டெல்லி ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பிசிஆர் கொரோனா சோதனை கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும், இந்த கருவியை மிகவும் குறைவான செலவில் இந்த கிட்டுகளை வணிக ரீதியில் சந்தைப்படுத்த முடியும் என்று டெல்லி ஐஐடி பேராசிரியர் பெருமாள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் இதற்கான ஆய்வு துவக்கப்பட்டு 3 மாதங்களில் இந்த பிசிஆர் கிட் உருவாக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
இப்போது இருக்கும் எல்லா கொரோனா தொற்று கண்டறியும் பிசிஆர் கிட்டுகளைவிடவும் இந்த கிட் தயாரிக்கும் செலவு குறைவானது என தெரிவித்துள்ள அவர், நாட்டிலேயே ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற கிட்டை உருவாக்கிய முதல் கல்வி ஸ்தாபனம் என்ற பெருமையும் டெல்லி ஐஐடி பெற்றுள்ளதாக கூறினார்.
