ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

விளம்பர பரபரப்பு இல்லாமல் கொரானா நிவாரண உதவி செய்யும் பாடகி சின்மயி!

 

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளம்பர பரபரப்பு இல்லாமல் நிவாரண உதவி செய்யும் பிரபல பாடகி சின்மயி!

கொரானா கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் இயல்பு வாழ்க்கை முற்றிலும் அழிந்துள்ளது.

இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்து தினக்கூலிகள், வீடுகளில் வேலை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதி உதவி பொருள் உதவி அளித்து வருகிறார்கள்.

பிரபல டப்பிங் கலைஞரும், பாடகியுமான சின்மயி சத்தமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறார்.

இதற்கான நிதியை, பொருட்களை திரட்டுவதற்காக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன்படி நிதி உதவி, நிவாரண பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஸ்பெஷல் பாடலை பாடி அவர்களின் இமெயில் முகவரிக்கு சிறப்பு பரிசாக அனுப்பி வைக்கிறார்.

அதோடு, யார் மூலமாக யாருக்கு உதவி செய்தோம் என்ற விவரங்களையும் வெளிப்படையாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விளம்பரமில்லாமல் தனது சேவையை செய்து வருகிறார் சின்மயி.

669 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன