வியாழக்கிழமை, மே 28
Shadow

கெட்டுப்போன ஆவின் பாலும்… SV.சேகரின் கொரானா அரசியலும்… – கோடங்கி

 

 

கெட்டுப்போன ஆவின் பாலும்… SV.சேகரின் கொரானா அரசியலும்…
– கோடங்கி

எஸ்.வி.சேகரின் வீட்டில் கெட்டுப்போன பால் பாக்கெட்டுகள்… 3மணி நேரத்தில் மாற்றப்பட்ட மர்மம்!

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. S.V.சேகர் அடிக்கடி சமூக வலைதளங்கங்களில் எதையாவது பதிவு செய்துவிட்டு ஏகப்பட்ட எதிர் விமர்சனங்களை பெறுவது வழக்கமான ஒன்று.

அதே போல ஒரு முறை பெண் பத்திரிகையாளர்கள் பற்றி ஏடாகூடமாக பேசிவைக்க அது பெரும் சிக்கலாக தலைமறைவாக ஆனார்.

ஆனால் அந்த தலைமறைவு காலத்திலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக உலக அளவில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு காலத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பொது மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனுக்குடன் பதில் அளிப்பதோடு கூடுமானவரை மக்களின் தேவைகளை அவர்களது இருப்பிடத்துக்கே போய் சேர்ப்பதை இத்தனை பணிச் சுமையிலும் செய்து வருகிறார். முதல்வரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் இன்று வெளியிட்ட ஒரு பதிவு முதல்வரின் மக்கள் சேவையை கொச்சைப்படுத்தும் விதமாகவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கொண்டதாகவும் சமூக வலைதளங்கங்களில் ஏகப்பட்ட பதிவுகள்.

அப்படி என்னதான் பதிவு போட்டார் என யோசிக்கிறவர்கள் கீழே பார்த்து படித்து கொள்ளவும்…


அந்த பதிவுக்கு 3 மணி நேரத்திற்கு முன் எங்கள் வீட்டில் ஆவின் நிறுவனத்தின் 9 பாக்கெட் பால் திரிந்து விட்டது. 90 வயசிலும், குழந்தைகளும் இருக்கிறார்கள். இப்போது என்ன செய்யன்னு பதிவு போட்டு அதை தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு டேக் செய்திருந்தார்.

எஸ்.வி.சேகரின் இந்த பதிவை பார்த்ததும் ஆவின் அதிகாரிகள் புதுசாக 9 பாக்கெட் பால் கவர்களை தூக்கிக் கொண்டு அரசு வாகனத்தில் எஸ்.வி.சேகர் வீட்டுக்குப் போய் கொடுத்து திரும்பி இருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதியாக இருந்த எஸ்.வி.சேகரின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது..

ஒரு முதல்வரையும், துணை முதல்வரையும் தன் வீட்டு வேலைக்காரர்கள் போல பால் வாங்கித்தரச் சொல்வது ஆணவத்தின் உச்சம்.

முதல்வர், துணை முதல்வர்களின் பதவியின் மரியாதை தெரியாத காமெடி நடிகர் எஸ்.வி.சேகரின் இந்த ஆணவப் பதிவுக்கு மதிப்பு கொடுத்து அரசு வாகனத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த ஆவின் நிர்வாக அதிகாரிகளை கண்டிப்பாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இதே கோரிக்கையை சாதாரண சாமானியன் எழுப்பி இருந்தால் இதே அரசும், ஆவின் நிர்வாகமும் அரசு வாகனத்தை எடுத்துக் கொண்டு பால் கொடுத்திருப்பார்களா?

இந்த அதிகார திமிர் பிடித்த எஸ்.வி.சேகரின் ஆணவ நடவடிக்கைக்கு அடிபணிந்து முதல்வர், துணை முதல்வர் பதவிகளின் மாண்பை காற்றில் பறக்க விட்டது அழியா சின்னமாக கொரானா அரசியல் வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது.

மும்பையில் கட்டட வேலைக்கு போய் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பசியும் பட்டினியுமாக இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தால் தமிழ் இனம் வாழ்த்தும். அதே போல தொலை தூரங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகளை ஏற்றிச் சென்று ஊரடங்கில் பல மாநில எல்லைகளில் சிக்கி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கும் அப்பாவி தமிழர்களை மீட்க இதே வேகத்தில் நடவடிக்கைகள் எடுங்கள்.

தினக்கூலி தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் அரசு ஏதாவது நிவாரண உதவி அறிவிக்குமா என காத்திருக்கிறார்களே அவர்களின் பசியை இதே வேகத்தில் போக்குவதற்காக நடவடிக்கைகள் எடுங்கள்.

இப்படி தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஆயிரம் அத்தியாவசிய பிரச்சினைகள் தீர்க்க வேண்டி உள்ளது.

அதை விட்டுவிட்டு ஒரு வேளைக்கு 9 பாக்கெட் பால் பயன் படுத்தும் ஆடம்பர நபர்களுக்கு பால் வாங்கித் தரும் பணியாளர் வேலை வேண்டாம்.

தனது ஆணவ திமிரில் இதுபோல தமிழக அரசையும் அதிகாரிககையும் தனது சுய நலத்துக்காக பால் வாங்கி வர்ச் சொன்ன காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு பகிரங்கமாக் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

– கோடங்கி

1,001 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன