
ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு – கடுப்பாகும் முதல்வர் மம்தா
நேற்று நடந்த பிரதமர் மோடியின் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொள்ளவில்லை.
ஆதே நேரம் பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்த போது கூறியது: “ இப்போது நடைமுறையில் இருக்கும் லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. சுழற்சி அடிப்படையில் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் பேச அழைக்கப்படுகிறார்கள். இதில் பிரதமர் மோடியுடன் பேச பல முதல்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பல கேள்விகள் கேட்டிருப்பேன். குறிப்பாக மேற்கு வங்கத்துக்கு ஏன் மத்தியக் குழுவை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டிருப்பேன்.
லாக் டவுன் குறித்த புரிதல் இல்லாமல் , முரண்பட்ட கருத்துககளை மத்திய அரசு தெரிவிக்கிறது. உத்தரவுகள் எல்லாம் தெளிவில்லாமல் இருக்கின்றன. லாக் டவுனுக்கு நான் ஆதரவாகத்தான் இருக்கிறேன். அதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருபுறம் லாக் டவுனை அமல்படுத்துங்கள் என்று கடிதம் எழுதுகிறார்கள். மறுபுறம் பிறப்பிக்கும் உத்தரவில் கடைகளைத் திறந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.
நீ்ங்கள் கடைகளைத் திறக்க அனுமதித்தால், லாக் டவுனைத் தீவிரமாக எவ்வாறு அமல்படுத்த முடியும். முதலில் லாக் டவுன் குறித்து முழுமையான புரிதலோடு மத்திய அரசு இருக்க வேண்டும் என ஆவேசமாகிறார் மம்தா.
