செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

பால்கனியில் இருந்து மக்களை பார்க்கும் கமல் – அமைச்சர் கடம்பூர் ராஜு

 

பால்கனியில் இருந்து மக்களை பார்க்கும் கமல் – அமைச்சர் கடம்பூர் ராஜு

ஜோதிகா பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக சூர்யா அறிக்கை வெளியிட்ட விவகாரம் குறித்து  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியபோது, ’ஜோதிகா விவகாரம் இப்போது விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. கொரானா உலகளாவிய பிரச்னையாக இருக்கும் போது ஜோதிகா கருத்து, சூர்யா அறிக்கை எல்லாம் விளம்பரத்திற்கு  தான் உதவும். இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்று கூறினார்.

 

அதேபோல் கமல்ஹாசனின் பால்கனி அரசுகள் குறித்த விமர்சனம் குறித்து கேட்டபோது, ‘“எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார். அரசியலாக மேதாவியாக பேசுவது  சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன். நடிகர் கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசும் பழக்கம் உடையவர். அவர் மக்களை பால்கனியிலிருந்து பார்க்கிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த நேரத்தில் அரசியல் கருத்துக்கள் சரியாக இருக்காது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

465 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன