
ஊரடங்கு காரணத்தால் உலகம் முழுதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு – ஐ.நா தகவல்
ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தி தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது.
அதோடு இந்த ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் வரும் மாதங்களில் தேவையில்லாமல் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல்நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் வரும் காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கான திறனை இழப்பதோடு உடல் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம் அப்படீங்கிறதை நம்மாளுங்க புரிஞ்சிகிட்ட விதம் தப்போ… ஒரு பக்கம் கொரானா கொத்து கொத்தாக மனிதர்களை கொன்று குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் இப்படி லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் தகவல்… கூட்டி கழிச்சா சரியா வருமா!
