செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப புதிய வழி – அரசு அறிவிப்பு

 

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 25.03.2020 அன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்கள் நலனுக்காகவும், அவர்களின் எண்ணிக்கையினை அறியும் வகையில் இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தமிழகத்துக்கு திரும்புவோரின் விவரம் அறிய, அவர்களை தனிமைப்படுத்தி வசதிகள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

792 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன