
ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு
கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி தொடங்கிய ஊரடங்கு இப்போது 4ம் கட்டமாக சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கின் போது சில தளர்வுகளுடன் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு, பல்வேறு மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இதற்கிடையே, ஆந்திராவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,474 ஆக உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் அங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் அலுவலகத்தில், பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முதல் மந்திரி ஜெகன் மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார்.
கொரானா வைரஸ் தடுப்பு மருந்தோ ஊசியோ இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சூழலில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் வைரஸ் தாக்கம் சுமார் 7 லட்சம் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற ஆந்திர முதல்வர் அறிவிப்பு அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
