செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

 

 

கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

இதன் காரணமாக ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் முடங்கிப் போனது.

சுமார் 2 மாதத்திற்கு பின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது.

இதன் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது.

படத்தில் நாசர் டப்பிங் பேசும்போது அரசு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி தனது பணியை செய்து முடித்தார்.

அதோடு, கொரானாவால் ரிலீஸ் முடக்கம் காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை நாசர் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஒரு பிரபலமான மூத்த நடிகர் தனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை குறைத்து கொண்டது மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும், மற்ற தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும்.

நாசரின் சம்பள குறைப்புக்கு தயாரிப்பாளர் தனஜெயன் நன்றி தெரிவித்தார்.

633 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன