திங்கட்கிழமை, ஆகஸ்ட் 24
Shadow

பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

 

 

பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

ராணா இந்த பேரையும் பாகுபலி வில்லனையும் அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க முடியாது.
அது தவிர தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி வில்லன் கதாப்பாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார்.

அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார்.

இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படத்தை டுவிட்டரில் ராணா வெளியிட்டார். இந்த ஆண்டு இறுதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். ராணாவுக்கு ஏராளமான நடிகர்-நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

931 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன