சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

 

பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

ஐ..நா.-வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம்தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குவார். இந்த குழு ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல் திட்டங்களுக்கு இந்த குழு பரிந்துரை வழங்கும். ஹர்ஷ் வர்தன் 3 ஆண்டு காலம் இந்த பதவியில் நீடிப்பார்.

ஏற்கனவே உலகளாவிய பெரும் பிரச்சினைகளை கொரானா வைரஸ் ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கொரானா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு முறையான எச்சரிக்கை செய்யாமல் விட்டதாக கூறி who அமைப்புக்கு நிதி வழங்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்து எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்த அமைப்புக்கு உலக அளவில் அமெரிக்கா தான் அதிக நிதி வழங்கி வருகிறது.

இதுபோன்ற பரபரப்பான சூழலில் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர் பொறுப்பேற்றது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே வைரஸ் பரவலை மறைத்து சீனா உலக நாடுகளை ஏமாற்றி விட்டதாக கூறி வைரஸ் தோன்றிய விவகாரத்தில் உண்மையான காரணம் கண்டறிய விசாரணை நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழலில் டிரம்ப் நட்பாக கருதும் இந்தியாவின் சார்பில் WHO தலைமை பொறுப்பு வந்ததால் சீனாவுக்கு நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது.

533 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன