வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

 

 

வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த சிக்கலில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.

இந்த முறை செல்லும் நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து வரும் பயணிகள் உடல் நலத்தில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

693 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன