சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

பீஸ் கட்டாத முதியவரை கட்டிப்போட்ட ஆஸ்பத்திரிக்கு சீல்!

 

மத்திய பிரதேச மாநிலம் ஷஜாபூரில் தனியார் மருத்துவனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 80 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து இறுதியாக 14 ஆயிரம் ரூபாய்க்கான கட்டண ரசீது கொடுத்துள்ளனர்.

கட்டணத்தை முதியவரால் கட்ட முடியவில்லை. இதனால் அந்த முதியவரின் காலை பெட்டில் உள்ள கம்பியில் கட்டி வைத்துள்ளனர். இந்தப்படம் கடந்த வாரம் வெளியாகியது. முதியவரை கட்டிப்போட்ட படம் வெளியானதை தொடர்ந்து விமர்சனம் எழும்பியது.

அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன