வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கொரானா உதவி செய்கிறவர்களுக்கு 2ம் நம்பர் பிசினஸ் உள்ளதா?! – நடிகர் கருணாஸ் MLA சர்ச்சை பேச்சு

 

கொரானா நிவாரண உதவி செய்ய எனக்கு 2ம் நம்பர் பிசினஸ் இல்லை என்ற கருணாஸ் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மணல் குவாரியோ, பெட்ரோல் பம்ப்போ அல்லது 2ம் நம்பர் பிசினஸ் எதுவும் இல்லாத நான் ஒரு கூத்தாடி. லீகலாக எனக்கு எந்த பிசினசும் இல்லாததால் திருவாடாணை தொகுயில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்க முடியவில்லை என்று நடிகர் கருணாஸ் பேசியது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக இன்னும் ஓராண்டில் தேர்தல் வரப்போவதால் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் கொரானா பரவலை மீறி தொகுதிகளில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

காமெடி நடிகர் கருணாஸ் திருவாடாணை தொகுதியின் எம்.எல்.ஏ. அந்த தொகுதியில் சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

தொகுதியில் நடைபெற்ற அரசின் நல திட்ட பணிகளை பார்க்கச் சென்ற கருணாசிடம் செய்தியாளர்கள் “தொகுதி மக்களுக்கு ஏன் எந்த ஒரு நிவாரண உதவியையும் செய்யவில்லை” என்று கேட்டதற்குதான் முதல் பாராவில் படித்த விஷயத்தை பேசியிருக்கிறார் கருணாஸ்.

இதே கருணாஸ் பொது மேடையில் தண்ணி அடிக்கவே ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு செய்கிறவர் நான் என பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

இப்போது ஓட்டுப் போட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய கூட பணம் இல்லையாம். எம்.எல்.ஏ. என்பதால் மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்குகிறார். அதோடு அந்த படி இந்த படி என ஆண்டுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேல் பணம் சம்பாதிக்கும் கருணாஸ் அதற்கு காரணமாக இருந்த தொகுதி மக்களுக்கு இந்த சூழலில் எந்த உதவியும் செய்யாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதோடு, மற்ற இடங்களில் நிவாரண உதவி செய்கிறவர்களை எல்லாம் முறையற்ற 2ம் நம்பர் தொழில் செய்கிறவர்கள் என்பது போல குறிப்பிட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மக்களுக்கு நிவாரண உதவி செய்யக்கூட மனமில்லாத கருணாஸ் மீண்டும் எப்படி அதே மக்கள் முன்பு போய் நின்று தேர்தலில் வாக்கு சேகரிப்பார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

465 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன