வியாழக்கிழமை, மே 16
Shadow

தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

 

 

தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

கொரானா பீதி, வைரஸ் பரவல் , உலக அளவில் தொற்று தாக்கத்திலும், பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருந்தாலும் இந்த பதட்டத்திலும் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்வார்” எனக் குற்றம் சாட்டினார்.

இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த டிரம்ப், “வரும் தேர்தலில் ஒருவேளை நான் தோல்வி அடைந்தால். அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி வேறு வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவேன். நான் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன” எனக் கூறினார்.

அதே நேரம் ஜனாதிபதி தேர்தலில் தான் தோற்றால் அது அமெரிக்காவுக்கு மிகவும் கேடு தரக்கூடிய விஷயமாக அமையும் என்றும் டிரம்ப் கூறினார். மேலும் வரும் தேர்தலில் இமெயில் மூலம் வரும் வாக்குகளைப் பெற ஜனநாயக கட்சியினர் மோசடி செய்வார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

தேர்தலில் மோசடி செய்து பதவியை பிடிப்பது உலகம் முழுதும் அரசியல்வாதிகளிடம் ஒரே மாதிரி தான் இருக்கிறது போலும்.

தேர்தல் வர இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே மோசடி குற்றச்சாட்டுகள் எழும்புவதால் தேர்தல் முறையாக நடக்குமா என்ற சந்தேகமும் அங்கு எழுந்துள்ளது.

326 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன