வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

கொரானா தடுப்பூசியை 18பேருக்கு செலுத்தி பரிசோதித்த ரஷ்யா… முடிவுக்கு காத்திருக்கும் உலக நாடுகள்!

 

உலகம் முழுதும் பரவி பல லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி இன்னும் அச்சத்தை ஏற்படுத்தி கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் மிக தீவிரமான ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் உலகின் முதல் நாடாக ரஷியாவில் கொரானா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம். அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரானா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளது.

ரஷியாவில் இதுவரை 5.60 லட்சம் பேரை கொரானா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது, 7,600 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த சூழலில், அங்கு உலகிலேயே முதல் முறையாக கொரானா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 18 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்து இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால் செப்டம்பர் இறுதிக்குள் உலகம் முழுதும் கொரானா வைரஸ் அழிக்கப்படும். ரஷ்யாவின் இந்த பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள உலகமே ஆவலுடன் காத்து கிடக்கிறது.

395 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன