திங்கட்கிழமை, மே 13
Shadow

திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி!

 

திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் மேலும் கூடுதலாக மூவாயிரம் உள்பட நாளொன்றுக்கு ஒன்பதாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரானா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் மற்றும் ஊழியர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது.

இதையடுத்து, ஜூன் 11 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கியது.

நாளொன்றுக்கு 6,750 பேர் என்ற நிலையில், 3 ஆயிரம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்திலும், 3 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனமும் செய்து வந்தனர்.

மேலும், விஐபி தரிசனத்தில் 750 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், எழுமலையான் தரிசனத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் மேலும் மூவாயிரம் டிக்கெட்டுகள் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் நாளொன்றுக்கு 9,750 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

275 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன