சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

 

டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

டெல்லியில் பிரியங்கா காந்தி வசிக்கும் அரசு பங்களா இப்போது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த பங்களாவை, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள், காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதோடு, கடந்த ஒன்றாம் தேதியுடன், பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசின் உத்தரவையும் மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அந்த பங்களாவை அனில் பலூனிக்கு ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து இதுவரை பிரியங்கா எந்த பதிலும் சொல்லவில்லை.

215 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன