திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

 

இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

வட இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு குஜராத், அசாம்,இமாச்சல் போன்ற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த சூழலில் இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக வெளியாகவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன