திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

 

வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியாவுக்கும் கொரானா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

லேசான வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியா இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரஸ் தாக்கம் அதிகமானதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன