வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

“துரோகியை விட்டு வெளியே வா” கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன் பட இயக்குனரின் சர்ச்சை டிவிட்…

 

ரஜினி “அண்ணாத்தே”க்கு பைட் குடுக்க சர்ச்சை நாயக்கராக களமிறங்கிய கமலின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன்!

ரஜினியின் கபாலி பட ரிலீசுக்கு முன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு இணையாக தாதா87 பட போஸ்டரில் தூக்கிக் கட்டிய லுங்கி, கருப்பு கண்ணாடி என தாதா கெட்டப்பில் சாருஹாசன் அசத்தினார்.

உலகிலேயே அதிக வயதில் ஹீரோயிச கேரக்டரில் நடித்து புதிய சாதனை படைத்தார்.

இப்போது மீண்டும் மிக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாருஹாசன்.

வட மாநிலத்தில் மிக பரபரப்பான அரசியல் தலைவராக இருந்த பால் தாக்ரே உருவ அமைப்பில் சாருஹாசனின் பர்ஸ்ட் லுக் வெளியானதுமே மீண்டும் நாடு முழுக்க தன் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்து இருக்கிறார் கமல்ஹாசனின் பெரிய அண்ணாத்தே சாருஹாசன்.

இந்த படத்தில் நாயக்கராக களம் இறங்குகிறார் சாருஹாசன். ஏற்கனவே அவர் தம்பி கமல்ஹாசன் நாயகன் படத்தில் நாயக்கராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கபாலி நேரத்தில் ரஜினிக்கு போட்டியாக தாதா87 ஆக களம் இறங்கியது போல இப்போதும் ரஜினி நடிக்கும் அண்ணாத்தேக்கு போட்டியாக நாயக்கர் வேஷத்தில் களம் இறங்குகிறார்.

இந்த படத்தை இயக்குவதும் ஏற்கனவே இவரை வைத்து தாதா87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீஜிதான்.

இவரும் சர்ச்சைகளுக்கு பேர் போனவர். தன் படத் தலைப்புகளிலேயேயும், பர்ஸ்ட் லுக் போஸ்டர்களிலும் கதை சொல்லும் சூட்சமம் தெரிந்தவர். ஏற்கனவே இவர் கைவசம் பப்ஜி, பீட்ரு , பஜாரி என பல படங்கள் உள்ளன.

இந்த சூழலில் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி ஒரு டிவிட்டர் பதிவு போட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

“கமல்ஹாசனின் பெரிய
????அண்ணாத்தா ????
சாருஹாசன் நடிக்கும்
நாயக்கர் வரலாறு
????துரோகியை விட்டு தள்ளி வா
காலம் கருவருக்கும்” என குறிப்பிட்டு போட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துரோகியை விட்டு தள்ளிவா காலம் கருவருக்கும் என யாரை சொல்கிறார் யாருக்கு சொல்கிறார் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.

ஜெயிக்கப் போவது ரஜினியின் அண்ணாத்தேவா சாருஹாசனின் நாயக்கரா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன