வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

உலக அளவில் கொரானா பாதிப்பில் இந்தியாவுக்கு 3ம் இடம், குணமடைவோர் பட்டியலில் 2ம் இடம்!

 

 

கொரானா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். மோசமான பாதிப்பு பட்டியலில் 3ம் இடம்.

 

உலகளவில் கொரானா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது.

உலக அளவில் பார்த்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்தான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26.16 லட்சமாக உள்ளது.

பிரேசிலை தொடர்ந்து இந்தியா இதில் 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, தொற்றுக்கு 25.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 18 லட்சத்து 8 ஆயிரத்து 936 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 53.13 லட்சம் பேர் தொற்றின் பிடியில் சிக்கிய நிலையில், 17.96 லட்சம் பேர் கொரோனாவை தோற்கடித்து வீடு திரும்பி இருக்கிறார்கள். அந்த வகையில் உலக அளவில் அமெரிக்கா 3-ம் இடத்தில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 57 ஆயிரத்து 381 பேர் கொரோனாவை தோற்கடித்து வீடு திரும்பினர். இதனால் இந்தியாவில் கொரோனாவின் மீட்பு விகிதம் என்பது 71.61 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

கொரோனாவில் இருந்து குணம் அடைவதில் தேசிய சராசரியை விஞ்சிக்காட்டி தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன. இந்த மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கிறார்கள்.

215 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன