
நொய்டா சாலை மூடப்பட்டது:
ராகுல்காந்தி ஜிந்தபாத் முழக்கத்துடன் தொண்டர்கள் ஹத்ராஸ் பயணம்.
நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச எல்லையிலேயே ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு.
டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் புறப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி பயணம்.
ராகுல் காந்தி உடன் தமிழக எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் பயணம்.
பிரியங்கா, ராகுல் வருகையால் நொய்டா தேசிய நெடுஞ்சாலை உபி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

சாலை முழுதும் போலீசார் ஆக்ரமித்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரியங்கா, ராகுல் கார்கள் தடுக்கப்பட்டது. பின்னர் பத்ற்றமான சூழல் நிலவ. கடைசியில் பிரியங்கா, ராகுல் அவர்களோடு மேலும் 3 பேர் என 5 பேர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது.
உபி யோகி அரசின் போலீசாரின் இந்த காட்டுதர்பார் நடவடிக்கைகள் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பாலியல் கொடுமையில் பலியான பெண்ணின் உடலை நள்ளிரவில் சாமியார் யோகியின் போலீசார் எரித்து சாம்பல் ஆக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

