ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் “அன்பறிவு”

 

“அன்பறிவு” சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய திரைப்படம் !

 

மிகச்சிறந்த குடும்ப திரைப்படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப்படங்களாக தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில் பலதலைமுறைகளாக மிகப்பெரும் நடிகர்களுடன், எம் ஜி ஆர் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப்பெரும் ஹிட் படங்கள் தந்து தனக்கென தனித்த பெயரை பெற்றுள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். தற்போது இந்நிறுவனம் வளர்ந்து வரும் இளம்தலைமுறை நடிகரான நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் “அன்பறிவு” படத்தை தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம் இப்படத்தினை இயக்குகிறார்.

தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் கூறியதாவது…

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளை, தருவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அப்படைப்புகள் எப்போதும் எங்களுக்கு மிகப்பெரும் பாரட்டையும், வரவேற்பையும் ரசிகரகளிடம் பெற்று தந்துள்ளது. எங்களுக்கு குவியும் பாரட்டுக்கள், மேலும் அழகான படைப்புகளை தர பெரும் ஊக்கமாக உள்ளது. நடிகர் ஆதி நடிப்பில் எங்களது அடுத்த படைப்பான “அன்பறிவு” படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மிக குறுகிய திரைப்பயணத்தில் குடும்பங்களுக்கு பிடித்த நடிகராக ஹிப்ஹாப் ஆதி மாறியிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் அவரை உலகளாவிய ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மாற்றியிருக்கிறது. விநியோக களத்திலும் மிக நல்ல பெயர் பெற்றிருக்கிறார். “அன்பறிவு” படம் அவரை தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் கொண்டு சேர்க்கும், இப்படம் அவரது திரை வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். இயக்குநர் அஷ்வின் ராம் முதன்முதலாக திரைக்கதையை கூறியபோது எனக்கு பெரும் ஆச்சர்யம் அளித்தது. கதையில் குடும்பங்கள் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. தரமான கதையும் அதனோடு கமர்ஷியல் அமசங்களும் நிறைந்திருந்தது. நடிகர் நெப்போலியன் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் அமெரிக்கவில் செட்டிலாகிவிட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயம், இப்படத்திற்காக அவர் இங்கு வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் கதாப்பாத்திரத்தை கேட்டவுடன் எங்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் இருந்து சென்னை பறந்து வந்து, முழுக்கதையையும் கேட்டு சம்மதம் சொன்னார். படத்தை சுற்றி மிக நல்ல விசயங்கள் தொடர்ந்து நடக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுமென நம்புகிறோம்.

இயக்குநர் அஷ்வின் ராம் கூறியதாவது…

மிகப்பெரும் நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் எனது முதல் படம் உருவாவது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். தமிழ் சினிமாவில் பல்லாண்டுகளாக, தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை தந்து வருகிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் “அன்பறிவு” திரைப்படம் உருவாவது எனது அதிர்ஷடமே. இப்படம் நகைச்சுவை அம்சங்களும், உறவுகளிடையேயான உணர்வுகளையும் கமர்ஷியல் அம்சத்துடன் கலந்து சொல்லும். இந்நேரத்தில் கதையை கேட்டு இப்படத்தை தயாரிக்க ஒத்துகொண்ட தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் அவர்கள், அர்ஜீன் தியாகராஜன் அவர்கள் மற்றும் செந்தில் தியாகராஜன் அவர்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஏற்கும் கதாப்பத்திரம் அனைத்து வயதினரையும் கவரும் இப்படம் அவர் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.

காஷ்மீரா “சிவப்பு மஞ்சள் பச்சை” படப்புகழ் நாயகி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். நடிகர் விதார்த் திருப்புனை ஏற்படுத்தும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். வித்தியாசமான கதைகளங்களை தேடி நடிக்கும் நடிகர் விதார்த்தின் திரைப்பயணத்தில் மற்றுமொரு மகுடமாக இருக்கும். நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா மற்றும் பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

135 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன