


ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்றால் அது சர்வாதிகாரம் – மோடியை மறைமுகமாக வெளுத்த கமல்
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளை விட கமல் முந்திக் கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
தேர்தல் கமிஷன் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தராமல் வேறு கட்சிக்கு ஒதுக்கி விட்டது.
இதில் கடுப்பான கமல் மத்திய அரசையும் குறிப்பாக மோடியையும் சகட்டுமேனிக்கு வெளுத்து வருகிறார்.
இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் எதற்கெடுத்தாலும் ஒரே… ஒரே என சொல்லுகிறவர்கள் சர்வாதிகாரம் நிறைந்தவர்கள் என மோடியை வெளுத்திருக்கிறார்.


“ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’. எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி!”
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’.
எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.
(1/2)— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2020
